கேரளா வெள்ளம் உயிரிழப்பு 357 ஆக உயர்வு: முதலமைச்சர் பினராயி விஜயன்
பதிவு: ஆகஸ்ட் 19, 2018, 08:41 AM
கேரள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஒருநாளில் மட்டும் 33 பேர் பலியானதாக தெரிவித்தார். 

பேரழிவில் இருந்து மீண்டு வர அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.

கேரள முதலமைச்சரின் அமெரிக்க பயணம் ரத்து
அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.