கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி - பிரதமர் மோடி

கேரள வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.

Update: 2018-08-18 07:26 GMT
கேரள வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார்.

இது தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இணையதள பதிவில், பிரதமர் மோடி தலைமையில் கொச்சியில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், தற்போது வரை 19 ஆயிரத்து 512 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார். முதல்கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, முதல்கட்டமாக 500 கோடி ரூபாயை, பிரதமர் ஒதுக்கியுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தண்ணீர் வடிந்த பிறகு தான் முழு சேத விவரங்கள் குறித்து கணக்கிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு.

வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் மோடி கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்