அத்துமீறிய காவலரை கட்டி வைத்து அடித்த பெண் - வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்
பதிவு: ஜூலை 17, 2018, 05:09 PM
பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்டில், காவலர் ஒருவரை பெண் ஒருவர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது அந்த பெண்ணிடம், காவலர் அத்துமீறி, நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண், காவலரை கட்டி வைத்து அடித்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.