"பெண்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" - பிரதமர் நரேந்திர மோடி

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது - மோடி;

Update: 2018-07-12 08:09 GMT
மகளிர் சுய உதவிக் குழுவினருடன், காணொலி காட்சி மூலம், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பெண்களின் விடாமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு தமக்கு மிகுந்த உத்வேகத்தை தந்ததாக  பிரதமர் அப்போது தெரிவித்தார். பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் குறிப்பாக விவசாயம் மற்றும் பால் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இரண்டு துறைகளும் பெண்கள் இல்லாமல் ஜொலிக்க முடியாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்களிப்பு அளப்பரியது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்கள் பொருளாதார விழிப்புணர்வும், வலுவும் அடைய உதவுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இரண்டரை லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும், இது அனைத்து மாநிலங்களிலும் விரைவில் தொடங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்