போலி ஏ.டி.எம் மூலம் பணத்தை திருடும் கும்பல் - எப்படி நடக்கிறது கொள்ளை?

சர்வதேச அளவில் தகவல்களை பரிமாறும் கொள்ளையர்கள்...

Update: 2018-07-12 07:25 GMT
போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி, பணத்தை திருடும் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி சந்துருஜி என்பவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படி பணத்தை திருடுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மோசடியின் தொடக்கப்புள்ளி ஏ.டி.எம் இயந்திரம் தான்.. ஏடிஎம்மில், யாருக்கும் தெரியாமல் பொருத்தப்படும் ஸ்கிம்மர் கருவி, ஏடிஎம் அட்டையை நகல் எடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், உள் தகவல்களையும் சேகரித்து வைக்க, அது கொள்ளையர்களின் மோசடிக்கு மூலதனமாகிறது. இதுபோன்று வெவ்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் தகவல்கள், பல்வேறு கொள்ளையர்களுக்கு பரிமாறப்படுகின்றன.  இந்தியாவில் சேகரிக்கப்படும் தகவல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதேபோல வெளிநாடுகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் இந்திய மோசடி பேர்வழிகளுக்கும் வந்து சேர்கிறது. இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில், கிரெடிட் கார்டில் பண பரிமாற்றம் செய்வதற்கு ஓடிபி எண் தேவையில்லை என்பதால், வெளிநாட்டு கார்டுகளை இந்தியாவில் பயன்படுத்தி பணத்தை திருடுவது தான் அதிகம். பணத்தை இழந்த வெளிநாட்டினர் அந்த ஊர் காவல்துறையிடம் முறையிடுவார்கள். ஆனால், அவர்கள் இழந்த தொகைக்கு அந்த நாடுகளில் காப்பீடு வழங்கும் நடைமுறை இருப்பதால் இந்தப் பிரச்சினையை அங்கு பெரிதாக்கப்படவில்லை. இதுதான் நம்மூர் மோசடிக்காரர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதேபோல, இந்தியர்களின் ஏடிஎம் தகவல்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் பணம் திருடப்படுகிறது. சர்வதேச அளவில் நடைபெற்று வரும் இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள், பல்வேறு குழுக்களாக செயல்படுகின்றனர். தகவல் பரிமாற்றத்தோடு நின்று விடாமல், மோசடி செய்வதற்கான கருவிகள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பரிமாறிக் கொள்கின்றனர். அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த புது மாதிரி மோசடிகளை சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள் பணத்தை இழந்தவர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்