மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

Update: 2018-07-09 05:45 GMT
டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி, மருத்துவ மாணவி நிர்பயாவை, பேருந்தில் கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல்  வன்கொடுமை செய்து கொன்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்யப்பட்ட நிலையில், பேருந்து ஓட்டுனர் ராம்சிங் என்பவர், சிறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்ற 5 பேரில் ஒருவர், சிறுவன் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், மற்ற 4 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து,  டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி, 4 பேரும் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்த நிலையில், இன்று நண்பகலில் தீர்ப்பு வெளியாகிறது.
Tags:    

மேலும் செய்திகள்