சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனை - உயர்தர உபகரணங்களுடன் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு உயர்தர உபகரணங்களுடன் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரின் பாராட்டு பெற்றுள்ளது.

Update: 2018-06-30 11:51 GMT
வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிக்கப்படுவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர். 10 படுக்கைகள்  கொண்ட இந்த பிரிவில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு மூலம் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இங்கு ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் குழுந்தைகள் சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு நோயின் தன்மை, அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அக்குழந்தைகளின் தாய்க்கு விரிவாக விளக்கப்படுகிறது. அவர்களுக்கு கவுனிசிலிங்கும் வழங்கப்படுகிறது. 8 அடி நீளம் கொண்ட கட்டு விரியன் பாம்பு கடித்ததில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக  உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்