2022-க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி உறுதி

2022-ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

Update: 2018-06-20 08:24 GMT
மத்திய அரசின் 4வது ஆண்டு சாதனையை ஒட்டி பல்வேறு திட்டங்கள் தொடர்பான பயனாளிகளிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இன்று விவசாயிகள் மத்தியில் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விவசாயிகள் மீது தாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக மோடி தெரிவித்தார். 2022-ஆம் ஆண்டுக்குள், விவசாயிகளுக்கு கிடைக்கும் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்