அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த விவசாயி
பதிவு: ஜூன் 19, 2018, 10:33 PM
புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளின் சேர்க்கை அதிகரிப்பதால், இவர்களுக்கு கழிவறை வசதி, தண்ணீர் வசதிகள் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. 
இதுகுறித்து தகவலறிந்த அதே ஊரைச் சேர்ந்த  மூர்த்தி என்ற இயற்கை விவசாயி, பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுத்துள்ளார்.