காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
பதிவு: ஜூன் 17, 2018, 01:40 PM
காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக செயலில் கொண்டு வர வேண்டும். மகாநதி முதல் வைகை நதி வரையிலான இணைப்பு திட்டத்தை விரைவாக மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். 15-வது நிதிக்குழுவில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும். ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை நிறுவ மத்திய அரசு முன்வர வேண்டும் என டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு. மேலும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை