இறந்தவரின் உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்கும் ஊழியர்கள்
போலீசார் முன்னிலையில் அரங்கேறிய அவலம்;
கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உடலை ஒப்படைக்க, ஊழியர் ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உடற்கூறு ஆய்வு செய்யும் ஊழியர் பரமசிவம் என்பவர் , உடலை ஒப்படைக்க 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக கேட்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு குறைவாக பணம் கொடுப்பவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது.