ஸ்கிம்மர் கருவி மூலம் நூதன கொள்ளை நடப்பது எப்படி?

புதுச்சேரி: ஸ்வைப்பிங் எந்திரத்தில் கார்டுகளை தேய்த்து கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்

Update: 2018-06-12 05:35 GMT
புதுச்சேரி : வெளிநாடுகளில் இருந்து இணையதள வர்த்தகம் மூலம் ஸ்கிம்மர் என்ற கருவியை வரவழைக்கிறார்கள் இந்த கருவி சிறிய அளவிலான கம்ப்யூட்டர் சாதனம் ஆகும். இதை ஏ.டி.எம். எந்திரங்களில் யாருக்கும் தெரியாமல் ஒட்டி வைத்து விடுவார்கள்.

பணம் எடுக்க ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தும் போது, அதில் உள்ள தகவல்கள் அனைத்தையும் ஸ்கிம்மர் கருவி பதிவு செய்து கொள்ளும். அதில் ஒரு சிறிய ரகசிய கேமராவும் இருக்கும். அது,  பாஸ்வேர்டு விவரத்தையும் மற்ற தேவையான விவரங்களையும் படம் பிடித்து கொள்ளும்.

இதன் பிறகு இந்த தகவல்களை வைத்து போலியாக ஏடி.எம். கார்டுகளை  தயாரிக்கின்றனர். அந்த கார்டுகளை ஏ.டி.எம். மையங்களில் பயன்படுத்தி பணத்தை எடுக்கிறார்கள். இவ்வாறு பணம் எடுத்தால் குறைந்த அளவு மட்டுமே பணம் எடுக்க முடியும். அதனால் ஏ.டி.எம். கார்டு மூலம் பொருட்கள் வாங்கியது போல் ஸ்வைப்பிங் எந்திரத்தில் கார்டுகளை தேய்த்து  லட்சக்கணக்கில் பணத்தை எடுக்கிறார்கள். 

இதற்காக வங்கிகளில் தவறான தகவல்களை வழங்கி ஏராளமான ஸ்வைப்பிங் எந்திரங்களை வாங்கி  வைத்துக்கொள்கிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்