நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்த பாலிவுட் நடிகர் | Cinema news | Actor Vidyut Jamwal | ThanthiTV

Update: 2023-12-11 02:29 GMT

பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், இமயமலை பகுதியில் 14 நாட்களை நிர்வாணமாக கழித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். தனது 43வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய இவர், இமயமலை வனப்பகுதியில், 14 நாட்களை நிர்வாணமாக கழித்த புகைப்படத்தை, இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வனப்பகுதியில் இதுபோல தனிமையில் வாழ்வதால், இயற்கையில் இருந்து தனக்கு புதிய சக்தி கிடைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை, வித்யுத் ஜம்வால் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்