வடிவேலுவின் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" படத்தில் இணையும் நடிகை ஷிவானி நாராயணன்
நடிகர் வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" திரைப்படத்தில், நடிகை ஷிவானி நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.;
நடிகர் வடிவேலுவின் நடிப்பில் உருவாகி வரும் "நாய் சேகர் ரிட்டன்ஸ்" திரைப்படத்தில், நடிகை ஷிவானி நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பு, ஓரிரு நாளில் முடிவுற உள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 2ஆம் வாரத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் படத்தில் இணைய உள்ள நடிகை ஷிவானி நாராயணன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.