'வலிமை' படத்தின் புதிய அப்டேட்
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படத்தின் விசில் தீம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.;
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படத்தின் விசில் தீம் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத், நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ள நிலையில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் காட்சி வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள விசில் தீம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.