கமல் படத்தில் மகன் வேடத்தில் நடிக்கிறார் காளிதாஸ்

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் புதியதாக இணைந்துள்ளார்.

Update: 2021-07-27 06:37 GMT
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் புதியதாக இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தில் கமல்ஹாசன் மகன் கதாபாத்திரத்தில் காளிதாஸ் நடிக்க உள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியான பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி படத்தில், திருநங்கையாக நடித்திருந்த காளிதாஸின் நடிப்பு, பெரிதாக பாராட்டப்பட்டது. பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்