சுசீந்திரனின் ஆன்லைன் சினிமா வகுப்பு - படைப்பாளர்கள் மத்தியில் வரவேற்பு
இயக்குநர் சுசீந்திரன் நடத்தவிருக்கும் ஆன்லைன் சினிமா பயிற்சி வகுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.;
இயக்குநர் சுசீந்திரன் நடத்தவிருக்கும் ஆன்லைன் சினிமா பயிற்சி வகுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார். வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன், வருகின்ற14-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஆன்லைன் சினிமா வகுப்பு நடத்துகிறார். ஒரு வகுப்பிற்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டணம் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுசீந்திரன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.