மாஸ்டர் - தியேட்டரில் வெளியிடவே விருப்பம்" - பட தயாரிப்பு நிறுவனம் தகவல்
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புவதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.;
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஓடிடி தளங்களில் இருந்து தங்களை அணுகிய போதும், படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புவதாக கூறியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என தாங்களும் காத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், விரைவில் நல்ல தகவல் வரும் என்றும் மாஸ்டர் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.