பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

Update: 2019-10-21 20:00 GMT
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்தப் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, படத்துக்கு தடை விதிக்கக் கோரி உதவி இயக்குனர் செல்வா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி சுரேஷ்குமார், இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்கிறார். 
Tags:    

மேலும் செய்திகள்