பிகில் படத்தின் "சிங்கப்பெண்ணே" பாடல் வெளியீடு

இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், நடிகர் விஜய் நடித்து வரும் "பிகில்" திரைப்படத்தின் "சிங்கப்பெண்ணே" என்ற பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2019-07-24 03:38 GMT
இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், நடிகர் விஜய் நடித்து வரும் "பிகில்" திரைப்படத்தின் "சிங்கப்பெண்ணே" என்ற பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. "சிங்கப்பெண்ணே" பாடல் சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் கசிந்த நிலையில், தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணிக்கு யூடியூப்பில் படக்குழுவினால் இந்த பாடல் வெளியிடப்பட்டது. பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்