அமெரிக்க மாப்பிள்ளைக்கு பச்சை கொடி : வரும் 11ஆம் தேதி பாடகி சுதா ரகுநாதனின் மகள் திருமணம்

பாடகி சுதா ரகுநாதனின் மகளுக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் முர்பிக்கும் வரும் 11ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது.

Update: 2019-07-02 09:48 GMT
கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா, மைக்கேல் முர்பி  என்ற அமெரிக்கரை காதலித்து வந்தார். மகளின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்த சுதா ரகுநாதன் இருவருக்கும், வரும் 11 ஆம் தேதி திருமணம் செய்து வைக்க உள்ளார். ஆனால், சுதா ரகுநாதனின் இந்த முடிவுக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. மைக்கேல் ஒரு கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம் சுதா ரகுநாதனின் தைரியமான முடிவுக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்