வில்லியாக நடிக்கிறார் நடிகை காஜல் அகர்வால்
வில்லியாக நடிக்கப் போகிறார் நடிகை காஜல் அகர்வால்.;
வில்லியாக நடிக்கப் போகிறார் நடிகை காஜல் அகர்வால். தற்போது, அவர் 'பாரிஸ் பாரிஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகி அவர் தான். இது, இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'குயின்' படத்தின் ரீமேக். அடுத்ததாக, 'இந்தியன் - 2' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த நிலையில், அவர் தெலுங்கில் ஒரு படத்தில், ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் வில்லியாக களமிறங்குகிறார் நடிகை காஜல் அகர்வால்.