25 வயது வரை எனக்கு தற்கொலை எண்ணம் இருந்தது - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

25 வயது வரை தனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-05 07:23 GMT
ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கையை, 'கனவு குறிப்புகள்' என்ற பெயரில், கிருஷ்ணா திரிலோக் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, மும்பையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான, 25 வயது வரை தனக்கு தற்கொலை எண்ணம் இருந்ததாகவும், தந்தையை இழந்ததால் அப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தந்தை இறந்துவிட்டதால், அதிக திரைப்படங்களில் வேலை செயவதைத் தவிர்த்து விட்டதாகவும், 35 திரைப்படங்களில் இரண்டை மட்டுமே தேர்வு செய்ததாகவும் ரஹ்மான் தெரிவித்தார். மரணம் என்பது, நிரந்தரமானது என்பதால், எல்லாவற்றிற்கும் முடிவு இருக்கும் போது ஏன் பயம் கொள்ள வேண்டும் என நினைத்ததாகவும் தன் வாழ்க்கையில் உருவான கடினமான சூழ்நிலைகள் பல, தனக்கு தைரியத்தை வரவழைத்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்