பிரபல இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்
பிரபல இயக்குநர் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்;
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். பழசிராஜா பட வாய்ப்புக்காக திருவனந்தபுரம் சென்ற போது, அப்படத்தின் இயக்குநர் ஹரிஹரன் , தம்மை தவறான நோக்கில் அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அவரை கடுமையாக திட்டி எஸ் எம்எஸ் அனுப்பிவிட்டு சென்னை திரும்பிவிட்டதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.. அவரது இந்த புகார் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.