நவம்பர் 3 காலை11 மணிக்கு வெளியாகிறது 2.0 ட்ரெய்லர்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.;

Update: 2018-10-28 08:53 GMT
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி  வரவேற்பை பெற்ற நிலையில் நவம்பர் 3ஆம் தேதி காலை 11 மணிக்கு 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியாவதாக  படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்