ட்விட்டரில் தன்னை பின் தொடரும் 1 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் சாய் பல்லவி
பதிவு: செப்டம்பர் 04, 2018, 12:25 PM
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில், பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தியா' படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் மாரி- 2, சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இயல்பான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் சாய் பல்லவியை, சமூக வலைதளத்தில், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சாய் பல்லவி, தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.