ப்ரியா வாரியர் கண் சிமிட்டியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு
பதிவு: செப்டம்பர் 01, 2018, 04:58 PM
ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்த ப்ரியா வாரியர் அதில் ஒரு பாடலுக்கு கண் சிமிட்டும் காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் இந்த பாடல் காட்சிகள் இஸ்லாமிய மதத்தை புண்படுத்துவதாக கூறி ஐதராபாத் மற்றும் மஹாராஷ்டிராவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் இந்த வழக்குகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக உள்ளதால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என ப்ரியா வாரியர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த பாடல் காட்சிகள் யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லை என கூறி ப்ரியா வாரியருக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது.