நடிகர் வடிவேலுவுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு : நில தகராறு தொடர்பான பிரச்னையில் சமரசம்

நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

Update: 2018-07-27 02:44 GMT
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தாக கூறி நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் மீது பழனியப்பன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு பதிலடியாக, மோசடி செய்ததாகக் கூறி பழனியப்பன் உள்பட இருவருக்கு  எதிராக 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த அனைத்து வழக்குகளும்  நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது நில பிரச்னை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் பழனியப்பன்  இடையே சமரசம் ஏற்பட்டு, பழனியப்பன் தரப்பில் வடிவேல் தரப்பினருக்கு 85 லட்சம் ரூபாய்க்கான   வரைவோலை அளிக்கபட்டது.இதனையடுத்து பழனியப்பனிடம் நஷ்ட ஈடு கோரிய மனுவை நடிகர் வடிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்