ரஜினி மக்கள் மன்ற பணிகள் குறித்து ரஜினி ஆலோசனை

கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.......

Update: 2018-07-12 10:13 GMT
கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில், ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம், ரஜினிகாந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஒன்றிய, கிளை நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும்,  நிர்வாகிகள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்