கோச்சடையான் படம் விவகாரம் : தனியார் நிறுவனத்திற்கு ரூ.6.5 கோடி பாக்கி - லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான வழக்கில், தனியார் நிறுவனத்திற்கு ஆறரை கோடி ரூபாய் பாக்கியை செலுத்தாத லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2018-07-03 08:59 GMT
கோச்சடையான் படம் தொடர்பாக "ஆட் பீரோ"  எனும்  தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பாக்கித் தொகை ஆறரை கோடி ரூபாயை லதா ரஜினிகாந்த் திரும்பச் செலுத்தவில்லை எனக்கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.  

இதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறரை கோடி ரூபாயை திரும்ப செலுத்த உத்தரவிட்டிருந்தது. 

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரன்ஜன் கோகாய் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தனியார் நிறுவனம் சார்பில் தற்போது வரை பணம் திருப்பிச் செலுத்தப்படவில்லை எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில், பணத்தை திரும்ப செலுத்துவது தொடர்பாக உறுதியான பதிலை தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்