விளையாட்டு திருவிழா - 26.10.2018 - இந்தியா Vs மே.இ.தீவுகள்: நாளை 3வது ஒருநாள்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை புனேவில் நடைபெறுகிறது.
விளையாட்டு திருவிழா - 26.10.2018 - இந்தியா Vs மே.இ.தீவுகள்: நாளை 3வது ஒருநாள்
x
5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா திக்கி திணறி டிரா செய்தது. இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது முழு பலத்துடன் களமிறங்குகிறது ஓய்வில் இருந்த பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர்களை இந்த கூட்டணி கட்டுப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்திய அணியில் முன்வரிசை வீராகள் மட்டுமே ரன் குவிப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் தோனி, ரிஷப் பண்ட் , ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி 2வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டாலும், அதே ஆட்டத்தை இந்த போட்டியிலும் வெளிப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். புனேவில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் யார் வெல்கிறார்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

மரக்கட்டைகளை அறுக்கும் வினோத போட்டி :

மரக்கட்டைகளை வேகமாக அறுக்கும் வினோத விளையாட்டு தான் TIMBER SPORTS. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம். சமீபத்தில் இதற்காக உலக சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் விலர்புல் நகரில் நடைபெற்றது. Underhand Chop, STIHL Stock Saw, Standing Block Chop, Single Buck,Springboard and the Hot Saw என 6 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்கள் தான் உலக சாம்பியன்.

மரக்கட்டையை வேகமாக ஒரே அளவில் ஒரே துண்டாக அறுக்கும் பிரிவு தான் SINGLE BUCK CHOP.இதில் கனடா வீரைரை வீழ்த்தி, அமெரிக்க வீரர் MATHEW முதலிடம் பிடித்தார். மரக்கட்டையை வெட்டி அதில் பலகையை வைத்து, அதன் மேல் ஏறி, உச்சியில் உள்ள மரக்கட்டைய வெட்டுவது SPRINGBOARD பிரிவு. இதில் ஆஸ்திரேலியா வீரர்  O'Toole முதலிடம் பிடித்தார்.

மரக்கட்டையை ஒரே அளவில் மூன்று துண்டாக வெட்டுவதே HOT SAW பிரிவாகும். இதனை 5 புள்ளி 79 விநாடிகளில் வென்று ஆஸதிரேலிய வீரர் O'Toole வென்றார். இதன் மூலம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸதிரேலிய வீரர் O'Toole கைப்பற்றினார். அவருக்கு ரம்பம் வடிவிலான பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. இதே போன்று அணிகளுக்கு இடையிலான மரக்கட்டைகளை அறுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  

மோட்டார் கார் ரேலி பந்தயம் :

மோட்டார் கார் ரேலி பந்தயத்தின் விறுவிறுப்பான சுற்று ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் கரடு முரடான பாதை மற்றும் நெடுஞ்சாலைகளில் கார் சீறிப் பாய்ந்தது. இதில் நடப்பு உலக சாம்பியன்ஷிப் படடத்திற்கு போட்டி போடும் பெல்ஜியம் வீரர் தியரி நியூவியில்லின் கார் (Thierry Neuville ) வளைவை கடக்கும் போது தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது.  தியரிக்கு ஏற்பட்ட விபத்தை பயன்படுத்திக் கொண்டு 5 முறை உலக சாம்பியனான செபாஸ்டியன் ஒஜியர், ஒரு நிமிடம் 34 விநாடிகளில் லேப்பை முடித்தார். போட்டி வரும் ஞாயிற்றுகிழமை வரை நடைபெறும்.





Next Story

மேலும் செய்திகள்