கொரோனா பரவலை தடுக்கும் ரஷ்ய தடுப்பூசி - முறையாக நிரூபிக்க அமெரிக்கா வலியுறுத்த​ல்

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ள நிலையில், அதன் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து சோதிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் ரஷ்ய தடுப்பூசி - முறையாக நிரூபிக்க அமெரிக்கா வலியுறுத்த​ல்
x
உலகை முடக்கி போட்டுள்ள கொரோனாவுக்கு,  ரஷ்யா  தடுப்பூசியை கண்டறிந்து உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார். அந்த ஸ்பூட்னிக் 5 என பெயரிடப்பட்டு உள்ளது. ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பூசி எத்தகைய  பாதுகாப்பு மற்றும் திறன் கொண்டது என சோதித்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளதாக எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பக்க விளைவுகள் ஏதும் உருவாகுமா என்றும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பாதுகாப்பு அளிக்குமா என்பது குறித்து ஆராய வேண்டியது அவசியம் என குலேரியா தெரிவித்துள்ளார். ரஷ்ய தடுப்பூசி பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் ஆனதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அமெரிக்க தொற்று நோய் துறை மருத்துவர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார். ரஷ்யர்கள் அது பாதுகாப்பானது தான், திறன்மிக்கது தான் என உறுதிப்படுத்த வேண்டும் என கோரியுள்ள அந்தோணி பவுசி , ரஷ்யா அதனை செய்வது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார். இதனிடையே, கமலேயா நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசியை, சிஸ்டெமா நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் தயாரிக்க அனுமதி கிடைக்கும் என அந்நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அக்டோபர் முதல் மக்களுக்கு இந்த தடுப்பூசியை போட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்