கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?

சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது.
கொரோனாவுக்கு மருந்து தான் என்ன ?
x
* சீனாவிற்கு வெளியே கொரோனாவால் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நாடான தாய்லாந்தில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு எச்ஐவி மருந்து கொடுக்கப்பட்டது. மருந்து கொடுத்த 48 மணி நேரத்தில் நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக அறிவித்தனர், தாய்லாந்து மருத்துவர்கள் 

* இன்னொரு புறம் வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய சீனா, சீன மருத்துவப்படி குணமடைந்த 20 நோயாளிகளின் இரத்தத்தில் இருந்து பெறப்படும் பிளாஸ்மா கொண்டு சிகிச்சை அளிக்க முன்வந்தது 

* ரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் நிறமற்ற திரவம்  தான், இந்த பிளாஸ்ம முதற்கட்டமாக தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளான 12  பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

* பிளாஸ்மா பரிமாற்ற சிகிச்சை  அளிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்நிலையில் 12 முதல் 24  மணி நேரத்திற்குள் முன்னேற்றம் தென்பட்டதாக கூறினர், மருத்துவர்கள்

* 2003 ஆம் ஆண்டு 774 பேரை பலி வாங்கிய சார்ஸ் நோயின் போதும் பிளாஸ்மா சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டது. 2014 வெடித்த எபோலா நோய்யின் போது, பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரைத்தது, உலக சுகாதார அமைப்பு

* ஜப்பானில் எச்.ஐ.வி மருந்துகளான லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது

* இந்திய மருத்துவ கழகமும் கொரோனாவுக்கு லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் மருந்துகளை பரிந்துரைத்தது.

* ஆனால் லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் மருந்துகளால் நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும்  மருந்து கொடுக்கப்பட்ட 199  நோயாளிகளில் 94 பேருக்கு மாறக வாந்தி, பேதி போன்ற  பக்க விளைவுகள் அதிகரித்ததாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

* ஸ்பெயினில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியான 62 வயது நோயாளிக்கு கலேத்ரா மருந்து கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் அந்த நோயாளி குணமடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது

* கலெத்ரா என்பது லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் ஆகியவற்றின் கலவை

* இந்தோனேஷியாவை பொறுத்தவரை,ஃபுளூ காய்ச்சலுக்கு பயன்படுத்த கூடிய அவிகன் மற்றும் குளோரோகுயின் மருந்துகள் கொரானாவை குணப்படுத்த கூடியவை என்பதால் குறிப்பிட்ட மாத்திரை மற்றும் மருந்துகளை அதிகம் இறக்குமதி செய்துள்ளதாக கூறுகிறார், அந்நாட்டு அதிபர்

* பிரெஞ்சு ஆராய்ச்சி படி, மலேரியா தடுப்பு மருந்துகளான ஹைட்ரோ குளோரோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் கொரோனாவுக்கான தீர்வு என உலக நாடுகளுக்கு அறிவித்தார், அமெரிக்க அதிபர் டிரம்ப்

* ஆனால் இந்த மருந்து சரியான தீர்வல்ல என்றும்  அதிகப்படியான அளவில் கொடுத்தால் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது, டிரம்ப்பின் பரிந்துரை

* எபோலா நோயிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டேசிவிர் மருந்து கொரோனாவுக்கு தீர்வு ஏற்படுத்த கூடும் என பரிந்துரைத்துள்ளது, உலக சுகாதார அமைப்பு  

* ரெம்டேசிவிர் மருந்து கொண்டு சிகிச்சை அளித்த சீனா, நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாக கூறியுள்ளது. 

* கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயாளிகள் சீனா மற்றும் இத்தாலியில் உயிரிழந்த நோயாளிகளில் பெரும்பாலானோர் வயதானோர் 

* இப்படி பல கோணங்களில் வைரஸை முற்றிலுமாக ஆராய்ச்சி செய்து கொரோனாவுக்கான தடுப்பூசியை கொண்டுவர பயன்பாட்டிற்கு கொண்டு வர 18 மாதங்கள் ஆகும் என உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

* தற்போது பிளாஸ்மா சிகிச்சையை முன்னெடுத்து வருகிறன,  அமெரிக்காவும், இங்கிலாந்தும் கொரோனா வைரஸை நோயாளியின் உடலில் இருந்து பிரித்து எடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், இந்திய மருத்துவர்கள் 


Next Story

மேலும் செய்திகள்