ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பு

ஜப்பான் சென்றுள்ள சொகுசு கப்பலில் கொரேனா வைரஸ் பரவி வருவதால் , அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்த 6 பேர் தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
டயமண்ட் பிரின்சஸ் என்ற பிரமாண்ட  சொகுசு கப்பல் பல நாடுகள் வழியாக  ஜப்பானின் யோஹோகாமா துறைமுகத்திற்கு சென்றது. கடந்த ஒரு வாரமாக அங்கேயே நிற்கும் அந்த கப்பலில் 3 ஆயிரத்து 711 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 135 பேருக்கு கொரேனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பயணிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் மேலும் 65 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பலில் உள்ள அனைத்து பயணிகளும் தங்கள் அறைகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவை அறைகளுக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே அவர்கள் அறையை விட்டு  வெளியே வர அனுமதிக்கப்பட்டுவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் ,அனைத்து பயணிகளுக்கும்  பரிசோதனை நடத்த உள்ளதாகவும் முடிவு செய்துள்ளதாக  ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் கட்சுநோபு கட்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த  135 பயணிகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த அன்பழகன் உள்ளிட்டவர்கள் தற்போது அந்த கப்பலில் உள்ளனர். தங்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து செல்ல மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்