இந்திய ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இம்ரான் கான் கண்டனம்

எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்திய ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இம்ரான் கான் கண்டனம்
x
எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் மூன்று தனித்தனி டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இதை ஐ.நா. சபை கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி பொது மக்கள் என்று தெரிவித்துள்ள அவர், காஷ்மீர் பிரச்சனையில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்