ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்

ஊழல் உள்ளிட்ட புகார்கள் காரணமாகவே பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை நியமித்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா விளக்கமளித்துள்ளார்.
ராஜபக்சேவை பிரதமராக்கியது ஏன்?-சிறிசேனா விளக்கம்
x
* தனது அதிரடியான அரசியல் முடிவுகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 2015-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றது முதலே ரனில் விக்ரமசிங்கேவின் நடவடிக்கை எதிர்பாராத வகையில் இருந்து வந்ததாக கூறினார்.

* பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ரனில் முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் சிறிசேன குற்றம்சாட்டினார்.

* கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரனில் பிடிவாதமாக இருந்ததாகவும், அவரது தன்னிச்சையான முடிவுகளால் தான் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

* தன்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருக்கும் அதிர்ச்சி தகவல்  தெரியவந்ததாகவும் கூறிய சிறிசேனா, இத்தகைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தனக்கு இருந்த ஒரே மாற்று வழி ராஜபக்சே தான் என்பதால் அவரை பிரதமராக நியமித்ததாகவும் குறிப்பிட்டார். 

* ரனில் விக்ரமசிங்கே நீக்கமும், ராஜபக்சே பதவியேற்பும் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானவை அல்ல என்றும்,  சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி அரசியல் சாசனத்துக்கு உட்பட்டே செய்யப்பட்டிருப்பதாகவும் இலங்கை அதிபர் சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்