ரூ.1 போட்டுவிட்டு உண்டியல் பணம் கொள்ளை - சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் பிரசித்தி பெற்ற மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டு உண்டியல் பணத்தை, இளைஞர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
x
சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலை நிர்வாகிகள் காலை திறக்க சென்ற போது கோயிலின் 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அவர்கள் சோதனையிட்டனர். அப்போது கோயிலுக்குள் பயபக்தியோடு வந்த இளைஞர் ஒருவர், சாமியை கும்பிட்டு விட்டு பின் ஒரு ரூபாய் காசை உண்டியலில் போடுவதும். பின் அதே உண்டியலை அவர் உடைத்துச் செல்வதும் சிசிடிவியில் வெட்டவெளிச்சமாக தெரிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்