சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம் - 2வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுப்பு

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
x
2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.-க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து பேரவை செயலாளர், உரிமைக்குழு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க மறுத்துவிட்டனர். மேல்முறையீடு மனுக்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
-


Next Story

மேலும் செய்திகள்