குட்கா எடுத்து சென்று விவகாரத்தில் உரிமை மீறல் புதிய நோட்டீஸூக்கு இடைக்கால தடை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
x
தமிழகத்தில் குட்கா எளிதில் கிடைப்பதாக கூறி, கடந்த 2017-ஆம் ஆண்டு குட்கா பொருட்களை சட்டமன்றத்தில் காண்பித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுகுறித்து, ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறு உள்ளதாக கூறி,  ரத்து செய்தது. இதில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த 7ம் தேதி, ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குட்காவை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி,18 எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு, மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அக்டோபர் 28ம் தேதிக்குள் பதிலளிக்க சபாநாயகர், சட்டமன்ற செயலாளர், உரிமை குழுவுக்கு  உத்தரவிட்டார்.
 


Next Story

மேலும் செய்திகள்