பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை, திமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
x
பிரதமர் நரேந்திர மோடியை, திமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதில் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர், பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாதுவில் அணை கட்ட , கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை பிரதமரிடம் அளித்ததாக கூறினார்.

" வேளாண் சட்டத்தை திருப்பி அனுப்ப வேண்டும்" -  திமுக எம்.பி. திருச்சி சிவா 

அரசியல் சட்டத்தின் 111ஆவது பிரிவின் கீழ், வேளாண் சட்ட மசோதாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கையெழுத்திடாமல் மீண்டும் அதனை நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் சார்பில் நேரம் கேட்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்தவுடன் இதுகுறித்து வலியுறுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், அவையின் மரபுகளை மீறி, வேளாண் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அப்போது அவர் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்