கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை - இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை

கிராமப்புறங்களில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
x
இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை எதிர்த்து  தமிழ்நாடு மருத்துவர் அலுவலர் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. கிராமப்புறங்களில் அரசுப்  பணியில் உள்ள மருத்துவர்களுக்கு  முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை மீறுவதாக உள்ளன என தெரிவித்த நீதிபதிகள், ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தால் இந்தத் தீர்ப்பு அதை பாதிக்காது என குறிப்பிட்டனர். மேலும், இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் என்றும் தீர்ப்பு அளித்தனர். இதற்காக மருத்துவர்களை கிராமப்புற, மலைகள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் 5 ஆண்டுகளில் பணிபுரிய மருத்துவர்களை மாநில அரசு வலியுறுத்தலாம் எனவும், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்