12 சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - 27 வயது ஓட்டுநர் போக்சோவில் கைது

மதுரை அருகே 12 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
x
நாகமலைபுதுக்கோட்டையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டிரை சைக்கிளில் 12 வயது சிறுமி தனது தம்பியுடன் உறங்கி கொண்டிருந்தாள். மதுபோதையில் வந்த ஓட்டுநர் காசி டிரை சைக்கிளோடு சிறுமியை கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  சிறுமியின் தம்பி, அங்கிருந்து தப்பி ஓடி வந்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளான். விரைந்து சென்ற பொது மக்கள், பெற்றோர் காசியை பிடித்து நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டுநர் காசியை, போக்சோ சட்டத்தின் கீழ் கைத செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்