சென்னையில் நேற்று முதல் மதுக்கடைகள் திறப்பு - நேற்று ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு மது விற்பனை

சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில், 33 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. ஆனால் வணிக வளாகங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட வில்லை. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிய நிலையில், நேற்று ஒரே நாளில் 33 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்