கொரோனா நிவாரண நிதி : தெரியப்படுத்துவதில் சிக்கல் என்ன ? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பதை தெரியபடுத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
x
கொரோனா தடுப்பிற்கு நன்கொடையாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்ற விவரம் அரசின் இணையத்தில் இல்லை எனக்கூறி வழக்கறிஞர் கற்பகம் , உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் , ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மற்ற மாநிலங்களின் , அரசு இணையதளங்களில் கொரோனா தடுப்பிற்காக பெறப்பட்ட தொகை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் , ஆனால் தமிழக அரசின் இணையத்தில் எந்தவித தகவலும் இல்லை என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இது தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட என்ன சிரமம் உள்ளது என்று கேள்வியை அரசுக்கு முன்வைத்தனர். மேலும் உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்