டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி - அமைச்சர் காமராஜ் கண்டனம்

டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அவரது கருத்துக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி - அமைச்சர் காமராஜ் கண்டனம்
x
கடந்த 4 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை மூலமாக பல்வேறு திட்டங்களில், ஆயிரக்கணக்கான குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன என்றும், இதனால் கூடுதல் நீர் சேமிக்கப்பட்டு, வேளாண்மை தழைத்தோங்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் காமராஜ், வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு விலை இல்லாமல் வழங்கியதன் மூலம், 6 லட்சத்து 68 ஆயிரத்து 39 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.  

மேட்டூர் அணை திறப்பிற்காக, டெல்டா பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், 67 கோடி மதிப்பீட்டில் 392 பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் 3 ஆயிரத்து 457 கி.மீ வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பணிகளை கண்காணிக்கும் பொருட்டு 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் காமராஜ்,  முதலமைச்சரை குறை கூற வேண்டும் என்பதற்காகவே, ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக கண்டனம் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்