குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை கல்லணையில் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரம்

தஞ்சை மாவட்டம் கல்லணையில் 20 லட்ச ரூபாய் செலவில் மராமத்து பணிகளை பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர்.
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறப்பு - தஞ்சை கல்லணையில் பழுதுபார்க்கும் பணிகள் தீவிரம்
x
தஞ்சை மாவட்டம் கல்லணையில் 20 லட்ச ரூபாய் செலவில் மராமத்து பணிகளை பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர். அணை முழுவதும் பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஷட்டர்களில் பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதைத்தொடர்ந்து, ஜூன் 16ஆம் தேதி கல்லணை திறக்கப்படும். கல்லணையை பொறுத்தவரை, காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் என பிரியும் ஆறுகள் மூலம், 12 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்