காவல் நிலையம் முன்பு வீரவசனம் பேசி டிக் டாக் : விளையாட்டு விபரீதமானது - இளைஞர் கைது

சீர்காழியில், காவல் நிலையம் முன்பு நின்று வீரவசனங்கள் பேசி டிக் டாக் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
காவல் நிலையம் முன்பு வீரவசனம் பேசி டிக் டாக் : விளையாட்டு விபரீதமானது - இளைஞர் கைது
x
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த கமலகண்ணன் , கொரோனா ஊரடங்கில் காவலர்களுக்கு உதவி செய்வதற்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனும் காவலர்கள் நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளார்.
நீண்ட நாட்களாக காவலர்களுக்கு தெரியாமல் காவல் நிலையம் செல்லும் போது எல்லாம் , திரைப்படங்களில் வரும் வீரவசனங்களை பேசி டிக் டாக்கில் விளையாட்டாக பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கமலகண்ணன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கமலகண்ணனை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்