"காசி தொடர்பான வழக்குகளில் ஆஜராக மாட்டோம்" - கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு

பல பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிய நாகர்கோவில் காசி தொடர்பான வழக்குகளில் ஆஜராக போவதில்லை என, கன்னியாகுமரி, நாகர்கோவில் வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்
x
நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி என்பவர் பெண்களை ஆபாச படம் எடுத்தது,  மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காசியால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் மற்றும், நாகர்கோவிலை சேர்ந்த பெண்  என்ஜினீயர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து நாகர்கோயில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், கைதாகியுள்ள காசி தொடர்பான வழக்குகளில், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வழக்கறிஞர்கள் ஆஜராக மாட்டார்கள் என அறிவித்துள்ளார் இது தொடர்பாக நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இது வரை, நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்