ஊரடங்கால் தொழிலில் ஏற்பட்ட இழப்பால் விரக்தி - தன்னை தானே கத்தியால் குத்தி தொழிலதிபர் தற்கொலை

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
x
மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன், பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்தார். ஊரடங்கால் இவரது தொழில் முற்றிலும் முடங்கிய நிலையில் கடன் கொடுத்தவர்களும் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளனர். வருமானமும் இல்லாமல் மன உளைச்சலோடு இருந்த இளங்கோவன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் உயிர் போகாததால் மேலும் விரக்தியடைந்த அவர், அதிகாலை தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அவர் கடிதம் எழுதி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இளங்கோவனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்