"ஏழைகளுக்கு எவ்வித சலுகையும் இல்லை" - முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டம் ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள சிறப்பு பொருளாதார தொகுப்பு திட்டம் ஏமாற்றம் அளிப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர், 45 லட்ச சிறு,குறு நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்த மத்திய அரசு 6 கோடிசிறு,குறு நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் விட்டதாக குற்றஞ்சாட்டினார். புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மத்திய அரசு எவ்வித திட்டத்தையும் அறிவிக்காமல் விட்டது வேதனை அளிப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Next Story